முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயங்கள் வழங்கிய வர்த்தகர் ஒருவருக்கு ஒத்திவைத்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஏற்றுக் கொண்ட குறித்த வர்த்தகருக்கு இரண்டு வருடங்களுக்கான கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதற்கு மேலதிகமாக 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட துலாஞ்சலி ஜயகொடிக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவின் மகள் துலாஞ்சலி ஜயகொடிக்கு 403 போலி 5000 ரூபா பண நோட்டுக்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரஷாந்த் பெரேரா என்ற வர்த்தகர் 2014-03-26 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

 

You might also like