காலிமுகத்திடலில் மர்மம் – வெளிவரும் எலும்புக்கூடுகளால் குழப்பம்

காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்கிரிலா ஹோட்டல் அமைந்துள்ள பகுதியிலிருந்து மேலும் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவின் கண்கானிப்பின் கீழ் நிலத்தை தோண்டும் பணிகள் நேற்று நடைபெற்றன.

இந்தப் பகுதியில் கடந்த 12ஆம் திகதி மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த எலும்பு கூடுகள் 4,25,15 மற்றும் 33 என சீல் செய்யப்பட்டு சட்ட வைத்தியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பின்னர் அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 11ஆம் திகதி இந்த பகுதியில் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை போது 8 அடியிலான மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் கிடைத்தன.

இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் சாரதி ஒருவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் கடந்த 26 வருடங்களாக அங்கு சேவை செய்வதாகவும் முன் அங்கு கல்லறை ஒன்று காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like