வவுனியா மகாறம்பைக்குளத்தில் கடையுடைத்து கொள்ளை 17வயது சிறுவன் கைது

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (22.05.2017) மதியம் 2.30மணியளவில் கடையுடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரோருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை  நேற்று (22.05.2017) மதியம் 2.30மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினையுடைத்து சுமார் 24,000 பெறுமதியான கமரா , 18,000 பெறுமதியான சம்சோங் தொலைபேசி , டயலோக் அட்டை என்பன கலவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா சாந்தசோலையினை சேர்ந்த 17வயதுடைய சிறுவனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like