வவுனியா பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (22.05.2017) மாலை 5.30மணியளவில் கேரளா கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி நோக்கி நேற்று (22.05.2017) பேரூந்தில் பயணித்த இராணுவ வீரரின் (பெயர் – சமர) கைவசமிருந்த 50கிராம் 200மில்லிகிராம் கேராளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் பூரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like