யாழ். நல்லூரானின் கற்பூரத் திருவிழா வெகு விமரிசை!- மணவாளக் கோலத்தில் தரிசனம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க்கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா  (22.05.2017) திங்கட்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே ஒளி வீசிக் கொண்டிருக்கும் வேற் பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.

விசேட அம்சமாக  விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்றது.

பேரழகுக் கோலத்தில் ஆறுமுகப்பெருமான் மாப்பிளைக் கோலத்தில் நடுநாயகமாக வீற்றிருக்க அருட்சக்திகளான வள்ளியும், தெய்வானையும் இருபக்கமும் அருட்சக்திகளாகக் காட்சி தர அந்தணச் சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்த திருக்கல்யாணக் காட்சியை என்னவென்று வர்ணிப்பது?

திருக் கல்யாணக் கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி,வெளிவீதி வலம் வந்தார்.

படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்

You might also like