வவுனியாவில் 4.5மில்லியன் பெறுமதியான பொருட்கள் 181பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு

வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று 08.01.2017 காலை 9.00மணியளவில் மாவட்ட செயலகத்தில் திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன் தலமையில் தேசிய நல்லினக்க ஒருமைப்பாட்டுக்குமான திட்டத்தினை அமுல்படுத்தும் முகமாக 4.5மில்லியன் பெறுமதியான பொருட்கள் 181பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன

120 பயனாளிகளுக்கு 5லீட்டர் பால் கான் , 61 பயனாளிகளுக்கு 10லீட்டர் பால் கான், 20 பயணாளிகளுக்கு புல் வளர்ப்பிற்கான உபகரணங்கள், கால் நடை சங்கத்திற்கு பால் சேகரிப்புகான 1.37 மில்லியன் பெறுமதியான பட்டா ரக வாகனம் என்பனவற்றை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார , வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக, லிங்கநாதன் , வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராஜா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

You might also like