போலி பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடு செல்வோருக்கு எதிராக நடவடிக்கை

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடு செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

போலியான ஆவணங்களை குறிப்பாக பரீட்சை பெறுபேறுகள் குறித்த சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் வெளிநாடு செல்வோருக்கு இலங்கை பரீட்சை திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியனவற்றினால் இணைந்து வழங்கப்படும் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதனை தடுப்பதற்கும், இலங்கை பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களின் நம்பகத் தன்மையை சர்வதேச அளவில் மேம்படுத்தவும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

You might also like