வித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த படுகொலை வழக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like