வித்தியா படுகொலை வழக்கு: சிறப்பு அமர்விற்கான நீதிபதிகள் நியமனம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

குறித்த படுகொலை வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்திருந்தது. ஆனால் வழக்கை கொழும்பிற்கு மாற்ற கடும் எதிர்ப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது யாழிலேயே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like