கிளிநொச்சி பளையில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

பளை கச்சார் வெளிப் பகுதியில் 2.35 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர், யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டுள்ளார்.

காயமடைந்த குறித்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நியுஸ்வன்னி செய்திகளுக்காக கிளிநொச்சியிலிருந்து மிரோஜன்

You might also like