சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் காயம்

யாழ். சாவகச்சேரி கச்சாய்ப் பிரதேசத்தில் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இரு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று நண்பகல்-12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புத்தூரைச் சேர்ந்த வி. மதிபரன் மற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த க.மயூரன் ஆகியோரே காயமடைந்தவர்களாவார்.

You might also like