கிளிநொச்சி 100ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலிருந்து மக்கள் கூட்டம்

கிளிநொச்சியில் கடந்த 94ஆவது நாள்களாக காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 31ஆம் திகதி 100ஆவது நாளை எட்டவுள்ளது.

இதையடுத்து வவுனியாவிலுள்ள சங்கங்கள், பொது அமைப்புக்கள் தமது ஆதரவினை வழங்குவது தொடர்பான ஒரு கலந்துரையாடல் நாளை (24) மாலை 4.30மணியளவில் வாடி வீடு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள சங்கங்கள், பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினையும் ஆலோசனையையும் வழங்குமாறும் கிளிநொச்சி 100ஆவது நாள் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதுடன் அடுத்த கட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதால் அனைத்து பிரதிநிதிகளையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

You might also like