புதுக்குடியிருப்பில் நகர அபிவிருத்தி காரணமாக மண்ணுக்குள் புதையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள வீடு

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப் பகுதியில் யுத்தத்தினால் பாதிப்படைந்த வீடு ஒன்று தற்போது நகர அபிவிருத்தியின் காரணமாக மண்ணுக்குள் புதையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இந்த பிரதேசத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் 2011ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்டனர்.

எனினும் தற்போது அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் குடும்பத்தின் நிலை குறித்தோ எவ்வித தகவல்களும் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதுகுடியிருப்பு வீதி மற்றும் வர்த்தக நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதன் காரணமாக குறித்த வீடு மண்ணுக்குள் புதைகின்ற அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like