இரத்தினபுரியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு! 60 நோயாளிகள் புதிதாக கண்டுபிடிப்பு

இரத்தினபுரி பிரதேசத்தில் எச்.ஐ.வி. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மருத்துவ அத்தியட்சகர் காஞ்சன உபசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனையின் எயிட்ஸ் மற்றும் பாலியல் வினை தொற்றுநோய்கள் தடுப்புப் பிரிவின் புள்ளிவிபரங்களைக் கொண்டு அவர் இதனை அறிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் மட்டும் இரத்தினபுரியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து 60 எச்.ஐ.வி. நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகை தந்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலமாக இவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் இளைஞர்கள் மட்டுமன்றி வயோதிபர்களும் கூட எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ்நோயின் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும், பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் மருத்துவ அத்தியட்சகர் காஞ்சன உபசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

You might also like