கடத்தப்பட்டதாக நாடகமாடிய பிக்கு பொலிஸாரினால் கைது

தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய பௌத்த பிக்கு ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேச விகாரையில் வசிக்கும் கிரியெல்லே சுதம்ம ஜோதி என்ற பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர் ஹெலயே பலய என்ற பௌத்த அமைப்பொன்றின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்த அமைப்பு அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்புடன் சேர்ந்து இயங்கி வருகின்றது.

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி தான் கடத்தப்பட்டு, தாக்குதலுக்கு இலக்கானதாக கிரியெல்லே சுதம்மஜோதி தேரர் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் பொலிசாரின் விசாரணையில் குறித்த முறைப்பாடு போலியானது என்றும் அவர் கடத்தப்பட்டமைக்கு எதுவித ஆதாரமும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாணந்துறை பொலிசாரினால் சுதம்ம ஜோதி தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like