முல்லைத்தீவில் வெளிச்ச வீடுகள் இன்மையால் அசௌகரிங்களை எதிர் நோக்கும் கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவு கடற்கரையோரப் பகுதியில் வெளிச்ச வீடுகள் இன்மையால் கடற்தொழிலாளர்கள் இரவு வேளைகளில் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் உள்ள சுமார் 4700 வரையான கடற்தொழிலாளர்கள் 73 கிலோமீற்றர் நீளமான கடற்கரையோரம் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் தெரிவிக்கையில்,

கரையோரப்பகுதிகளில் வெளிச்சமின்மை மற்றும் வெளிச்சவீடுகள் அமைக்கப்படாமையினால் ஆழ்கடல் தொழில்களுக்குச் சென்று கரை திரும்புவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளை கரை சேர்ப்பதிலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதனால், கரையோரப்பகுதிகளில் வெளிச்ச வீடுகளையும், படகுகளை பாதுகாக்கக்கூடிய வகையில் இறங்கு துறைகளையும் அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

You might also like