இளம் இராணுவ பெண் சிப்பாய் மரணம் – கொலையா? தற்கொலையா?

இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் பெண் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொரளை – கின்ஸி வீதியில் அமைந்துள்ள இராணுவ பெண்கள் படை தலைமையகத்தின் காவலர்கள் அறையினுள் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

24 வயதான சூரியவெவ – விஹாரகல பிரதேசத்தை சேர்ந்த பெண் சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் இராணுவ சிப்பாயின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like