கிளிநொச்சி சிவநகர் கிராமத்தில் சனசமூக நிலையம் திறப்பு

கிளிநொச்சி சிவநகர் கிராமத்தில் சனசமூக நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இன்று பிற்பகல் மூன்று மணிக்கு சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சனசமூக நிலையமானது ஏழு இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

சிவநகர் மூத்த பிரஜைகள் சங்க தலைவா் இ.ரகுபதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் கரைச்சி பிரதேச சபையின் நூலகர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை நேற்றைய தினம் இரவு சிவநகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வருகைக்கு எதிராக தமிழத்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளா் நா.வை.குகராசாவின் முழு நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்டு சிவநகர் சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும்.,

மேலும் சிவநகர் மக்கள் நன்றியுள்ள மக்கள் எனவும் சுவரொட்டிகள் குறித்த பிரதேசமெங்கும் நேற்று இரவு ஒட்டியிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like