​வவுனியாவில் கடும்காற்றுடன் கூடிய மழை : கார் ஒன்று சேதம்

வவுனியாவில் இன்று (24.05.2017) மதியம் முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது

வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெள்ளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய  மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த பழமைவாய்ந்த மரமோன்று முறிந்து வீழ்ந்ததில்  மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்ப்படுத்தி சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில் மரம் வெட்டி அகற்றப்பட்டது

மற்றும் வவுனியா இலுப்பையடிசந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை

இவ் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள் முறிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like