வவுனியாவில் இயற்கையில் கோர தாண்டவம் :பொலிஸாருக்கு நடந்த சோகக்கதை

வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினி சூறாவளியில் மரங்கள் முறிந்து விழுந்து வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

அத்துடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டடம் ஒன்றின் பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

எனினும் இதுவரையில் எவ்வித உயிர்ச்சேதங்களுக்கும் ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like