மகளை 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

தனது மகளை தொடர்ந்து சுமார் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தைக்கு கடுமையான வேலையுடன் கூடிய 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும், மன்றுக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்றும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் அவரின் சிறைத் தண்டனையை மேலும் 6 வருடங்களுக்கு நீடிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

You might also like