தமிழ் – முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு – தொடரும் இனவாத தாக்குதல்

கஹாவத்தை நகரில் அமைந்துள்ள இரு கடைகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைத்தொகுதியே இவ்வாறு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நான்கு மாடி கட்டடம் மற்றும் அதற்கு அருகில் இருந்த சில்லறை கடையுமே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் கடை தீ பிடித்து எரிந்ததனை பார்த்ததாக நான்கு மாடி கட்டடத்தின் உரிமையாளர் கஹாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வடிவேல் என்ற வர்த்தகருக்கு சொந்தமான சில்லறை கடை முழுமையாக அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மாத காலமாக கிட்டத்தட்ட 20 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகிய போதிலும் இந்த சம்பவங்கள் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சட்டம் செயற்படாதது ஏன் என அமைச்சரவை கூட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை செயற்பாடு தொடர்பில் மாகாண பொலிஸார் பொறுப்பு கூற வேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like