அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வது தற்காலிமாக நிறுத்தம்

அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முன்வைக்கப்பட்ட குறை மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்க முடியாது என அரச நிதி நாடாளுமன்ற தெரிவுக்குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் தற்போது பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பான அறிக்கையை வழங்கும் வரை அமைச்சர்களுக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு நிதி தெரிவுக்குழு, வரவு செலவு தொடர்பான திணைக்களத்திடம் கோரியுள்ளது.

அரச நிதி தெரிவுக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அதன் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் இதனை சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள் சிலருக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அரசாங்கம் இரண்டு குறை மதிப்பீடுகளை சமர்பித்திருந்த்து.

அதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. எனினும் அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமைச்சர்களுக்கு கொள்வனவு செய்த வாகனங்கள் அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு தெரிவுக்குழு, வரவு செலவு தொடர்பான திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like