முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடருகின்றது

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக வனவள பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கூழாமுறிப்பு, புதுக்குடியிருப்பின் வசந்தபுர பகுதியில் இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெறுவதாக வனவள பாதுகாப்பு பிரிவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும் இது தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பிரதேச மக்கள் ஒட்டிசுட்டான் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

You might also like