வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலய சிரமதானமும், கலந்துரையாடலும்.!

வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிரமதானப் பணியும், ஆலயத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் இன்றையதினம்(2017/01/08) ஆலயத் தலைவர் பாபு தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் திரு வ.பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு ஸ்ரீகரன் கேசவன், கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like