சந்தேக நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சிகிச்சை

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முயன்றபோது அவரின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கண்டியை அண்மித்த ரங்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ரங்கல பிரதேசத்தில் நடைபெற்ற வாகன விபத்து ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய ரங்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி நேரடியாக சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் திடீரென்று பொலிஸ் பொறுப்பதிகாரி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். எதிர்பாராத தாக்குதல் காரணமாக காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போது தெல்தெனிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like