பிரபல பாடசாலைகளின் அதிபர்களின் முறைகேடுகள்! விசாரணைகள் தீவிரம்

நாட்டின் பிரபல பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் உத்தரவிற்கு அமைய பிரபல பாடசாலை அதிபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.

பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது பிரபல பாடசாலை அதிபர்கள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்ட அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் ஆரம்ப கட்டப் பணிகள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பிரபல பாடசாலைகள் பலவற்றின் அதிபர்கள் முறைகேடுகளுடன் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், கம்பஹா, களுத்துறை, கண்டி, குருணாகல் மற்றும் சில மாவட்டங்களின் பாடசாலைகளின் அதிபர்கள் இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like