மகனுக்கு பதிலாக வைத்தியராக மாறிய தந்தை – இளைஞன் பரிதாபமாக பலி

வைத்தியர் ஒருவரின் தந்தை வைத்தியராக முயற்சித்தமையால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மகனின் வைத்தியர் தொழிலை பயன்படுத்தி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை வழங்கியமையால், நோயாளியான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மகனின் தனியார் வைத்தியசாலையில் வைத்து தானும் ஒரு வைத்தியர் என குறிப்பிட்டு, குறித்த சந்தேகநபர் சிகிச்சை வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தெஹிவளை அத்தியடி வீதியில் இயங்கும் தனியார் வைத்தியாலையில், வயிற்று வலி என கூறி சிகிச்சை பெற்று கொள்ள வந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாபிம ஹெயின்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான துஷார லக்மால் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அந்த இளைஞனின் தந்தை தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய, வைத்தியருக்கு பதிலாக அவரது தந்தை சிகிச்சை அளித்த விடயம் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like