கலப்பு மின்­னுற்­பத்தி பேட்டை பூந­க­ரி­யில் – அனு­மதி வழங்­கி­யது அமைச்­ச­ரவை

240 மெகா­வொட் கொள்­ள­ள­வைக் கொண்ட காற்றுச் சக்தி மற்­றும் 800 மெகா­வொட் கொள்­ளள­வைக் கொண்ட சூரிய சக்தி மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளைக் கொண்ட கலப்பு மின்­னுற்­பத்திப் பேட்­டையை பூந­கரி பிர­தே­சத்­தில் நிர்­மா­ணிக்­கும் வேலைத் திட்­டத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடை­பெற்­றது. இதில், மின்­வலு மற்­றும் புதுப்­பிக்­கத்­தகு சக்தி வளங்­கள் அமைச்­சர் ரஞ்­சித் சியம்­ப­லாப்­பிட்­டிய சமர்ப்­பித்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

புதுப்­பிக்­கத்­தகு சக்தி வளங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக் குறிப்­பி­டத்­தக்க அளவு மின்­சக்­தி­யைத் தேசிய மின்­சார அமைப்­பில் இணைத்­துக் கொள்­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. காற்று சக்தி மற்­றும் சூரிய சக்தி ஆகி­யவை மூலம் மின்­சா­ரத்­தைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு உகந்த பிர­தே­ச­மாக வட மாகா­ணத்­தில் உள்ள பூந­க­ரிப் பிர­தே­ச­மா­னது இலங்கை நிலை­பே­று­தகு சக்தி வள அதி­கார சபை­யி­னால் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது.

அத­ன­டிப்­ப­டை­யில் 240 மெகா­வொட் கொள்­ள­ள­வைக் கொண்ட காற்று சக்தி மற்­றும் 800 மெகா­வொட் கொள்­ள­ள­வைக் கொண்ட சூரிய சக்தி மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளி­னைக் கொண்ட கலப்பு மின்­னுற்­பத்தி பேட்­டை­யைப் பூந­க­ரிப் பிர­தே­சத்­தில் நிர்­மா­ணிக்­கும் வேலைத்­திட்­டத்தை 3 கட்­டங்­க­ளா­கச் செயற்­ப­டுத்த அனு­மதி கோரப்­பட்­டது.

இதற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.

You might also like