யாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று அடையாளம் காணப்பட் டனர்.

சாவகச்சேரி, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த 15-ம் திகதி கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முச்சக்கரவண்டியுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னரான மோதலில் பிரதான சந்தேகநபரை கடந்த 19ம் திகதி பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நான்கு சந்தேகநபர்கள் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டு இனங்காட்டப்பட்டனர்.

இதையடுத்து குறித்த நால்வர் உட்பட்ட 6 பேரையும் அடுத்த மாதம் 2-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக தென்மராட்சியின் மந்துவில், மட்டுவில், கச்சாய், சாவகச்சேரி போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like