திருநெல்வேலி கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம்

திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட மேற்படி நபர், பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக, பொலிஸார் மேலும் கூறினர்.

You might also like