தம்பியின் மகள் மீதான அண்ணனின் ஈனச் செயலுக்கு நீதிபதி வழங்கிய தண்டனை

இளைய சகோதரனின் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய அண்ணனுக்கு எதிராக நேற்றைய தினம் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலேயே குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, குறித்த சந்தேகநபர் பெரியப்பா முறை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,சந்தேகநபர், 2008 ஆம் ஆண்டு முதல் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் மனைவி தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்றும், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடையவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டமையால்,அவரை 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like