கப்பம் கோரியவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிசூட்டில் காயம்..!

ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் கப்பம் கோரிய ஒருவரை கைது செய்ய சென்ற சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தவறுதலான துப்பாக்கிசூட்டினால் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமுற்றுள்ளார்.

கேகாலை ஹெட்டிமுல்லை பிரதேச வர்த்தகர் ஒருவரிடம், கப்பம் கோரி மிரட்டிவந்த சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று ஹெட்டிமுல்ல பிரதேசத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளது.

இந்நிலையில் கப்பம் கோரியவரை அதிரடியாக கைது செய்ய முற்பட்டவேளை, குறித்த சந்தேக நபர் தப்பிக்க முயற்சித்ததனால், பொலிஸாருடன் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் போது பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கிசூடு காரணமாக காயமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தப்பிக்கமுற்பட்ட சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டு அதே வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like