அரச சேவையில் வடக்கு – கிழக்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!

அரச சேவைக்கு ஆட்சேர்க்கும் போது வடக்கு, கிழக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றில் தெரிவித்தார்

வடக்கு கிழக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரசதுறையில் வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இந்த விடயம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்குப் பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கோரும் ஒத்திவைப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் அரச முகாமைத்துவம், சமுர்த்தி, ஆசிரியர் போன்ற அரச தொழில்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

You might also like