வேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்: சம்பந்தன்

அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

You might also like