சற்று முன் முறிகண்டி பகுதியில் ரயில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலிலேயே பலி

முறிகண்டி பகுதியில் இன்று (25.05.2017) இரவு 8.40மணியளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சம்பவ இடத்திலிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்

இரண்டாம் இணைப்பு

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 8.30 மணிக்கு யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரத்துடன் மோதுண்டே குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் புகையிரதத்தில் ஏற்றி செல்லப்பட்டு மாங்குளம் புகையிரத நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து நியுஸ்வன்னி செய்திகளுக்காக சிங்கம் லதி

You might also like