கண்டாவளைப்பிரதேச கலாச்சார பேரவையினால் கவிதை நூல் வெளியீட்டுவிழா

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச கலாச்சார பேரவையினால் நிக்சன் எழுதிய மலர்ந்த சிந்தனை எனும் கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, (25.05.2017) பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதி உதவியில் எழுதிய நூல் வெளியீட்டு விழா கண்டாவளை பிரதேச செயலாளரும் கலாச்சார பேரவையின் தலைவருமான த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் நூலின் முதற்பிரதியினை வெளியிட்டு வைத்துள்ளார்.

நூலின் வெளியீட்டுரையினை வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் மா. அருள்சந்திரனும் ஆய்வுரையினை கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வே.தபேந்திரனும் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் உதவிப்பிரதேச செயலாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் கலைஞர்கள் படைப்பாளிகள் தருமபுரம் பங்குத்தந்தை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

You might also like