அவசர அறிவிப்பு! பாதிப்பு ஏற்பட்டால் 117 இலக்கத்திற்கு அழைக்கவும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் வளவகங்கை ஆகிய நீர்நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நீர்நிலைகளுடன் தொடர்புடைய ஆறுகளை அண்மித்த பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக களனி கங்கையின் க்ளேன் கோஸ் பிரதேசத்திலும், களு கங்கையின் இரத்தினபுரி பிரதேசத்திலும், கிங் கங்கையின் பத்தேகம பிரதேசத்திலும் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனவே, இந்த பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின் போது 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like