இலங்கையில் பல பிரதேசங்களில் மண் சரிவு, வெள்ளம் : 6 பேர் பலி, நால்வரை காணவில்லை! தேடுதல் பணிகள் தீவிரம்..

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாத்தறையில் தெனியாய – மொரவகந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like