பூந்தோட்டம் மகா வித்தியலாயம் பாடசாலைக்கு போட்டோப்பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாயத்திற்கு இன்று (26) காலை 7.30மணியளவில் பாடசாலை பிரார்த்தனையில் வைத்து போட்டோப்பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின்போது பாடசாலையின் தேவைக்கு போட்டோப்பிரதி பெறும் இயந்திரம் தேவைப்படுவதாக கேட்டுக்கொண்டதற்கு அமைவாக விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரப்பட்டதாரிகள் சங்க இணைப்பாளருமான ம.ஆனந்தராஜாவினால் குறித்த பாடசாலைக்கு போட்டோப்பிரதி இயந்திரம் பெற்றுத்தருவதாக அவரது உரையின்போது தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தனது வாக்குறுதிக்கு அமைவாக இன்று காலை பாடசாலையில் மாணவர்களின் காலைப்பிரார்த்தனையின்போது பாடசாலையின் அதிபர் திருமதி கிருஷ்ணவேணி நந்தகுமாரிடம் புதிய போட்டோப்பிரதி இயந்திரத்தினை வழங்கிவைக்கப்பட்டதுடன் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கும் துவிச்சக்கரவண்டி மாணவியின் தேவைகருதி வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்க சர்வதேச நிதிப்பங்களிப்பினூடாக போட்டோப்பிரதி இயந்திரம் துவிச்சக்கரவண்டி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

You might also like