வவுனியாவில் மதுபோதையில் பணியாற்றும் இரு உயர் அரச அதிகாரிகள்!

வவுனியா மாவட்டத்தில் மிகவும் முக்கியமான பொறுப்பிலுள்ள இரு உயர் அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பான அதிகாரத்திலிருந்து விலகி நடப்பதுடன் நிறை மதுபோதையில் தமது அலுவலகத்திற்கச் செல்வதும் பணிகளை கையாண்டு வருவதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை அவர் சரியான நேரத்தில் செய்து முடிக்காமல் மாடுகள் வெட்டும் கொள்களத்தில் தனது நேரத்தினை செலவிட்டு வருகின்றார்.

நேற்று தமது அலுவலகத்திற்கு விடுமுறை என்று தெரிவித்துவிட்டு காலையில் சிறிது நேரம் அலுவலகத்திலிருந்துவிட்டு மாடுகள் வெட்டும் கொள்களத்திற்குச் சென்று அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொண்டதுடன் மாடுகள் வெளியே எடுத்துச் செல்வதற்கு நகரசபையினால் வழங்கப்பட்ட இறப்பர் முத்திரையினையும் மதுபோதையில் கடமைகளை மேற்கொண்டள்ளதை நேரடியாக ஊடகவியலாளர்கள் களத்திற்குச் சென்று அவதானித்தள்ளனர்.

இவருக்குப் பின்னர் வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளார் என்ற காரணத்தினால் இவர் மீது பலர் முறையிட பின்னடித்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல்  பணிப்பாளராக பணியாற்றும் உயர் அதிகாரி தமது கடமை நேரத்தில் மது அருந்துவது அங்கு பணியாற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளினால் திட்டிவருவது போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு பின்னால் மத்திய அமைச்சர் ஒருவரின்  செல்வாக்கினைப்பயன்படுத்தி தமது அரச பதவியை தவறாகப்பயன்படுத்தி வருகின்றார்.

குறித்த இருவரும் வவுனியா மாவட்டத்தில் மதுபோதையில் அரச உயர் பதவிகளை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like