சீரற்ற காலநிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் வறட்சி நிலவிவந்த நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.

இதன் காரணமாக தாழ்நிலை பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

You might also like