கிளிநொச்சி படையினரின் 2017ஆம் ஆண்டிற்கான புதிய கண்டுபிடிப்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கருவிகளின் கண்காட்சி இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சி இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2017ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட பல்வேறு சாதனங்கள் மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததோடு, அவை தொடர்பில் விளக்கங்களும் படையினரால் வழங்கப்பட்டன

மேலும் புதிய தொழில்நுட்பத்துடன் கழிவுப்பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு இலகுவாக வேலைகளை செய்யக் கூடிய பல புதிய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதன்போது இராணுவ படை கட்டளை அதிகாரி, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

You might also like