போர் முடிந்து 8 வருடங்களின் பின்னரும் முல்லைத்தீவு மக்களின் அவல வாழ்வு!…

முல்லைத்தீவில் பொதுமக்கள் தமது தனிப்பட்ட பயணங்களை தற்பொழுதும் உழவு இயந்திரத்தில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடப்பெயர்வை மேற்கொண்ட பொதுமக்கள் அதிகமாக உழவு இயந்திரங்களையே பயன்படுத்தியுள்ளனர்.

யுத்தம் முடிந்து எட்டுவருடங்கள் ஆகும் இந்த ஆண்டு வரை அவர்களின் பயணங்களுக்கு உழவு இயந்திரங்களே உதவுகின்றன.

இதன் மூலம் வெளிப்படும் உண்மை என்ன வென்றால் உலகம் பல்வேறுபட்ட நவீன வசதிகளுடன் வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்குள் இலங்கையும் அடங்குகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் ஏனைய மாவட்டங்களை விட முல்லைத்தீவு மாவட்டம் எட்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைப்பாட்டிலே தான் தற்பொழுதும் இருக்கின்றதாக கூறப்படுகின்றது.

கொடிய யுத்தங்களையும் இயற்கை அனர்த்தங்களை சந்தித்துள்ள முல்லைத்தீவு மாவட்டம் இன்னமும் மீளவில்லை.

உலகின் நவீன செயற்பாட்டுக்களுடன் தாமும் இணைந்து கொள்ள விரும்பும் போதும் அது முடியாத நிலையே காணப்படுகின்றது

அத்துடன் பல்வேறுபட்ட அழுந்தங்களுடனும் மன உளைச்சல்களுடனுமே முல்லை மக்கள் தொடர்ந்தும் வாழ்வதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like