நாட்டின் நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொள்ள உடன் அழையுங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலும் அதன் நிலைப்பாடு தொடர்பிலும் மக்கள் அறிந்து கொள்ளவதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 0112136226, 0112136136, 0773957900 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக அனர்த்தங்கள் தொடர்பான நிலவரங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த சேவை 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின் போது 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like