இயற்கையின் கடும் சீற்றம் – மீட்பு பணியில் அதிநவீன கவச வாகனங்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் நீர்மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக சுமார் ஆறு இலட்சம் பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்காக 7 ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமான படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக 28 படகுகளை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அந்தப் பகுதியிலுள்ள மீனவர்களிடமுள்ள படகுகளை தந்து உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையினும் கடற்படையினரால் 700க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடற்படையின் மீட்பு குழுக்களினால் தெற்கில் மாத்திரம் 357 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக அதிக திறன் கொண்ட BTR ரக விசேட 6 கவச வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமானனோர் களப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை 84 அம்புலன்ஸ் வண்டிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் நூற்றுக்கு மேப்பட்டோர் உயிரிழந்ததுடன் 110 பேர் காணாமல் போயுள்ளனர்.

 

You might also like