வடமாகாணத்தில் வசிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கு ஓர் அறிவித்தல்

யாழ். இந்திய துணைத் தூதரகமானது வடமாகாணத்தில் வசிக்கும் அல்லது பணிபுரியும் இந்தியப் பிரஜைகளுக்குத் தனது சேவைகளை வெளிப்படைத் தன்மையாகவும், மேலும் கிடைப்பனவாகும் வகையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த முயற்சியின் ஒரு அங்கமாக எதிர்வரும் ஜூன் மாதம்-03 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் -11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை இல- 14, மருதடி ஒழுங்கை, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தனது செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் அறிந்து கொள்ள விசேட விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்வொன்றை நடத்துகின்றது.

இந்த நிகழ்வின் போது விசா, கடவுச்சீட்டு, இந்திய வெளிநாட்டுப் பிரஜாவுரிமை, மற்றும் தூதரக சேவைகள் உள்ளடங்கலான அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அக்கறையுள்ள வடமாகாணத்தில் வசிக்கும் அல்லது பணி புரியும் இந்தியப் பிரஜைகள் அனைவரையும் இந்த நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளுமாறு இந்தியத் துணைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

You might also like