யாழ். நாவற்குழி பகுதியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழ். நாவற்குழி பகுதியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதில் புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாய்படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை பயணித்தபுகையிரத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல் புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின்தலை மீது விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like