நூறாவது நாளில் சர்வமத பிரார்த்தனைக்கு தயாராகும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் தொடர் போராட்டம் நூறாவது நாளை எட்டவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் சர்வமத பிரார்த்தனையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த சர்வமத பிரார்த்தனையின் மூலம் சர்வதேசத்துக்கு இப்பிரச்சினையை மீண்டும் தெரியப்படுத்தி தீர்வினை பெற்றுத்தர கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அன்றைய தினத்தில் தமக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அனைவரையும் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஒன்றுகூடுமாறு காணால் போனவர்களுடைய உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை.

அந்தவகையில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 100ஆவது நாளை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like