கிளிநொச்சி வன்னேரியில் வடமாகாண முதலமைச்சரால் சுற்றுலா மையம் திறந்து வைப்பு

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் இன்று கிளிநொச்சி வன்னேரிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட அந்த சுற்றுலா மையத்தை வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளதுடன், பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக் குளத்தை அண்டிய பகுதியிலேயே இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால், இந்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண ஆளுநரின் செயலாளர், கரைச்சிப் பிரதேச சபை செயலாளர், கரைச்சிப் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like